'ஹார்முஸ் ஜலசந்தி என்பது முற்றிலும் எங்களுக்கு சொந்தமானது; முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது'; டொனால்ட் ட்ரம்ப்..! - Seithipunal
Seithipunal


ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த அக்டோபர் மாதத்தில் ஹார்முஸ் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப், ''நாம் எதை விரும்புகிறோமோ அதை அடைகிறோம். ஹார்முஸ் ஜலசந்தி என்பது முற்றிலும் எங்களுக்கு சொந்தமானது.'' என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாங்கள் நினைத்தால் அந்த பிராந்தியத்தின் எண்ணெய் வளங்களையும், நாட்டின் பகுதியையும் கையகப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 28 தேதி முதல் ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்தில் கடும் சிக்கல்கள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் ஹார்முஸ் ஜலசந்தி வழியே பயணித்த 07 எண்ணெய் டேங்கர் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகி அதிர்ச்சியை ஏற்டுத்தியது. அதாவது ஈரான் போர் தொடங்கிய பிறகு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கப்பல்கள் சேதமடைந்தது இதுவே முதன்முறை ஆகும். 

தங்களுடைய அனுமதியோ அல்லது ஒருங்கிணைப்போ இன்றி எந்தவொரு கப்பலும் இந்தப் பாதையைக் கடக்கக் கூடாது என்றும், மீறினால் தாக்குதல்கள் தீவிரமாக்கப்படும் என்றும் ஈரானின் புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூழலில், கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வரும் வாஷிங்டன் திங்க் டேங்க் தரவுகளின்படி, வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட மிக அதிகமான தாக்குதல்கள் இந்த அக்டோபர் மாதத்தில்தான் பதிவாகியுள்ளன. இதுகுறித்து மூத்த ஆய்வாளர் நோவாம் ராய்டன் தெரிவிக்கையில்; ஹார்முஸ் பகுதியில் அதிக கப்பல் தாக்குதல்கள் நடந்த மாதமாக இந்த அக்டோபர் பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், பிரிட்டன் கடற்படை வர்த்தகப் போக்குவரத்துப் பிரிவும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Donald Trump says the Strait of Hormuz is entirely under American control


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->