மகளிர் உலகக் கோப்பை: கேப்டன் லோராவின் அதிரடி; பாகிஸ்தான் படுதோல்வி; புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா..! - Seithipunal
Seithipunal


13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் 08 அணிகள் பங்கேற்றுள்ளன. 08 அணிகளும் முதல் லீக் சுற்றில் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 04 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அதனபடி, இன்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இருப்பினும் மழை குறுக்கிட்டதால் போட்டி 40 ஓவராகக் குறைக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் என இமாலய இலக்கை குவித்தது. அணியின் கேப்டன் லோரா 82 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்ததாக, லுஸ் 59 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மரிசனி கெப் 43 பந்துகளில் 68 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

மீண்டும் மழை குறுக்கிட்டதால் 20 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. ஆனாலும் வழமைபோலவே பாகிஸ்தான் வீராங்கனைகள் அடுத்தது விக்கெட்களை இழந்தனர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 07 விக்கெட் இழப்பிற்கு வெறும் 83 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 150 ரன்கள் என்ற வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின் தள்ளி முதலிடத்துக்கும் முன்னேறியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

South Africa tops the points table after defeating Pakistan in the Womens World Cup league match


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->