அரசு விழாக்கள், நலத்திட்டங்கள், நிர்வாகிகள் சந்திப்பு! - உதயநிதி ஸ்டாலின் தென் மாவட்டங்களில் 3 நாள் அதிரடி சுற்றுப்பயணம் - Seithipunal
Seithipunal


தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தென் மாவட்டங்களை மையமாகக் கொண்டு நாளை முதல் மூன்று நாட்கள் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அரசு விழாக்கள், நலத்திட்ட உதவி வழங்கல், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் என நிரம்பிய நிகழ்ச்சித் திட்டத்துடன் அவர் பயணம் தொடங்குகிறார்.

இதன்படி, நாளை பிற்பகலில் கார் மூலம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு, மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கத் தயாராக உள்ளனர்.

மாலை 5 மணிக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட அரசு விழாவில் அவர் பங்கேற்று, சுமார் 15 ஆயிரம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

அதோடு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவு பெற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பது போன்ற முக்கிய நிகழ்ச்சிகளையும் தொடங்கிவைக்கிறார்.

இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள்.பின்னர் பாளையங்கோட்டையில் நடைபெறும் கட்சியின் 28 சார்பு அணிகளின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடி, கட்சித் திட்டங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இரவு நெல்லையில் தங்கும் அவர், மறுநாள் காலை தென்காசி அரசு விழாவில் பங்கேற்று தொடர்ந்து சங்கரன்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.அன்றைய மாலை வள்ளியூரில் அரசு மருத்துவமனை திறப்பு விழாவை நடத்திவிட்டு, பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் செல்கிறார்.

அங்கு இரவு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் மீண்டும் நெல்லை திரும்பி ஓய்வெடுக்கிறார்.

சுற்றுப்பயணத்தின் இறுதிநாளில், தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் பெரிய அளவிலான பொதுவிழாவில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு உதவிகளை வழங்குகிறார். இதில் எம்.பி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக பங்கேற்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government festivals welfare schemes meeting administrators Udhayanidhi Stalin 3 day action packed tour southern districts


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->