டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை: ஈரான் ராணுவ சக்தி சிதறியது… முழுமையாக வீழ்த்துவோம்...!
Donald Trump warning Iran military power shattered we completely defeat
டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் விளைவாக, ஈரான் ராணுவ திறன் கடுமையாக சிதறியுள்ளதாக தெரிவித்தார். “ஈரானின் பெரும்பாலான ராணுவத் தளங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
அவர்களிடம் இருந்த கடற்படை, விமானப்படை, வான்வழி கண்காணிப்பு அமைப்புகள், ரேடார் வலையமைப்புகள் என அனைத்தும் செயலிழந்த நிலையில் உள்ளன. அவர்களின் ராணுவ சக்தி கிட்டத்தட்ட முழுமையாக முறியடிக்கப்பட்டுவிட்டது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ஈரானின் ஏவுகணை களஞ்சியமும் வேகமாக குறைந்து வருவதாகவும், அந்நாட்டின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
“முதலில் அவர்களின் ராணுவ சக்தியை முழுமையாக முடக்க வேண்டும்; அதன் பிறகே நிலைமை தெளிவாகும்” என்றும் குறிப்பிட்டார்.ரஷ்யா–உக்ரைன் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மிகுந்த அளவில் ஆயுத உதவி வழங்கி வந்தாலும், அமெரிக்காவிடம் இன்னும் போதுமான அளவில் நடுத்தர மற்றும் உயர்தர வெடிமருந்துகள் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, ஈரான் நடுநிலை நாடுகளையே குறிவைத்து தாக்குவதாக குற்றம் சாட்டிய அவர், அந்த நாடுகள் தற்போது ஈரானுக்கு எதிராக கடுமையாக பதிலடி கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
கடல் வழி எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படுமோ என்ற உலகளாவிய அச்சம் அதிகரித்து வரும் நிலையில், தேவைப்பட்டால் அமெரிக்கா கடற்படை, ஸ்ட்ரீட் ஆப் ஹோர்முஸ் வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்றும், “உலகின் எரிசக்தி ஓட்டம் தடைப்படாமல் இருப்பதை அமெரிக்கா உறுதி செய்யும்” என்றும் டிரம்ப் உறுதியளித்தார்.
English Summary
Donald Trump warning Iran military power shattered we completely defeat