துபாய் விமானத்தில் பகீர் சம்பவம்; 9/11 பாணி பயங்கரவாத தாக்குதலை முறியடித்து 180 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி..! - Seithipunal
Seithipunal


துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 180-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பறந்த ஃப்ளைதுபாய் விமானத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த உதவி விமானி திடீரென தாக்குதல் நடத்திய நிலையில், அந்த தாக்குதலை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேப்டன் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

9/11 பாணி தாக்குதலைப் போன்ற இந்த பயங்கரவாத தாக்குதல் முயற்சியைத் தடுத்து, விமானத்தை பத்திரமாக தரை இறக்கிய இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

 ஃப்ளைதுபாய் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த உதவி விமானி திடீரென காக்பிட்டைப் பூட்டியுள்ளார். பின்னர், கேப்டன் சுமித் மச்சார் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதாவது குறித்த விமானத்தைக் கீழே மோதி விபத்துக்குள்ளாக்க உதவி விமானி முயன்றதாகக் கூறப்படுகிறது. கத்தி குத்தில் படு காயமடைந்த நிலையிலும் கேப்டன் சுமித், உதவி விமானியை எதிர்த்து தைரியமாக சண்டையிட்டு, விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றுள்ளார்.

விமானம் திடீரென கீழ்நோக்கி சரிந்ததை அடுத்து, காக்பிட்டில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பயணிகளும், மாற்று விமானிகளும் காக்பிட் கதவைத் திறந்து தாக்குதல் நடத்திய உதவி விமானியை மடக்கிப் பிடித்த்துள்ளனர். இதயனையடுத்து குறித்த விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரை இறக்கப்பட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த கேப்டன் சுமித் மச்சார், முன்னதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். படுகாயமடைந்த சுமித் மச்சாருக்கு தபூக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாதுரியமாக செயல்பட்டு 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தாக்குதல் நடத்திய உதவி விமானி  செய்யப்பட்டு தீவிர விசாரணையின் பிடியில் உள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian pilot saves the lives of 180 people by thwarting a terrorist attack attempted by the co pilot on a Dubai bound flight


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->