காந்தி ஜெயந்தியன்று மது விற்பனைக்கு தடை: மீறினால் கடும் நடவடிக்கை; சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!
Chennai District Collector announces ban on liquor sales on Gandhi Jayanti
அக்.02-ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''02.10.2026 (வெள்ளிக் கிழமை) அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 251l(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள்,
FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள்/மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 02.10.2026 (வெள்ளிக் கிழமை) அன்று காந்தி ஜெயந்தி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Chennai District Collector announces ban on liquor sales on Gandhi Jayanti