தமிழகத்தில் நடப்பது தவெக ஆட்சியா? அல்லது தனியார்களின் ஆட்சியா? டிடிவி தினகரன்..! - Seithipunal
Seithipunal


''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது மக்களின் நலன்களுக்கும், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் செயல்பட வேண்டுமே தவிர அனைத்து திட்டங்களையும் தனியாருக்கு தாரைவார்க்க அல்ல,'' என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளதாவது;

''தமிழகத்தின் மதுரை மற்றும் நாகர்கோவில் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டங்களை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த முடிவு செய்திருக்கும் நகராட்சி நிர்வாகத்துறை அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை அறிவித்துள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் நேரடியாக தொடர்புடைய பாதாள சாக்கடைத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த வேண்டிய அரசு நிர்வாகமே அதனை தனியாருக்கு தாரை வார்க்க முனைவது கடும் கண்டனத்திற்குரியது

ஏற்கனவே மாநகராட்சிகளில் குடிநீர் தொடங்கி, தூய்மைப் பணிகள் வரை ஒன்றன் பின் ஒன்றாக தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பணிகளை தனியார் நிறுவனம் முறையாக செயல்படுத்தவில்லை என எழும் தொடர் குற்றசாட்டை கருத்தில்கொள்ளாமல், தற்போது பாதாள சாக்கடைத் திட்டத்தையும் தனியார் வசம் ஒப்படைப்பதன் மூலம் தமிழகத்தில் நடப்பது தவெக ஆட்சியா? அல்லது தனியார்களின் ஆட்சியா? என்ற கேள்வி எழுகிறது.

எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது மக்களின் நலன்களுக்கும், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் செயல்பட வேண்டுமே தவிர அனைத்து திட்டங்களையும் தனியாருக்கு தாரைவார்க்க அல்ல, என்பதை உணர்ந்து, மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்''. என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran asks whether the government in Tamil Nadu is run by TVK or by private entities


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->