வெஸ்ட் இண்டீஸ் அணியை துவம்சம் செய்த இந்திய அணி; ரோஹித் சர்மா சதம்; சுப்மன் கில் அதிவேக இரட்டை சதம்; இஷான் கிஷன் உலக சாதனை முறியடிப்பு..! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 406 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி  அபார  வெற்றிபெற்றது. 

முன்னதாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 07 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. ஜான் கேம்ப்பெல் 101 ரன்களும், கேப்டன் ஷாய் ஹோப் 104 ரன்களும், அமீர் ஜாங்கு 114 ரன்களும் விளாசினர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அடித்த அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

406 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்கள், முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டினர். பவர்பிளே ஓவர்களில் மட்டுமே விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் சுப்மன் கில், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்து வெறும் 62 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

மறுமுனையில் அதிரடி  காட்டிய ரோஹித் சர்மா 32 பந்துகளில் அரைசதம் கடந்து, 72 பந்துகளில் 10 பவுண்டரிகள், 06 சிக்சர்களுடன் சதம் கடந்தார். பின்னர் 75 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

விராட் கோலி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய கில் 133 பந்துகளில், 26 நான்கு ரன்கள், 08 ஆறு ரன்கள் என  223 ரன்களை குவித்தார். மறுமுனையில் ருதுராஜ் 31 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் 43.3 ஓவர்களில் 02 விக்கெட்டினை மாத்திரம் இழந்து, இந்திய அணி 406 ரன்கள் அடித்து  வெற்றிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், வெறும் 117 பந்துகளில் இரட்டை சதம் விளாசி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் நெருங்கிய நண்பன் இஷான் கிஷனின் உலக சாதனையை அவர் உடைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rohit Sharma scores a century and Shubman Gill hits a lightning fast double century against the West Indies ODI


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->