மீண்டும் மக்களை மகிழ்விக்க திரைக்கு வருகிறது 'ஃப்ரண்ட்ஸ்' திரைப்படம்!
friends movie rerelease vijay surya devayan
2001-ம் ஆண்டு வெளியாகிய நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த திரைப்படம் 'ஃப்ரண்ட்ஸ்' ரசிகர்கள் மனதில் இனிமையான நினைவுகளை ஏற்படுத்தியது. இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, ஸ்ரீமன், விஜயலட்சுமி, மதன் பாப், சரிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மலையாளத் திரைப்படமான 'ப்ரண்ட்ஸ்' கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தமிழ் பதிப்பு, சித்திக்கின் கதை மற்றும் திரைக்கதை, கோகுல் கிருஷ்ணாவின் வசனங்கள், மற்றும் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இளையராஜா இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிக்க வரவேற்பை பெற்றது. குறிப்பாக, வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றுவரை ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகின்றன.
இந்நிலையில், ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 4K டிஜிட்டல் ரீமாஸ்டர் முறையில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. அடுத்த மாதம் 21-ந்தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களின் கடந்த கால வெற்றி படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்வது புதிய பரிணாமமாக உள்ள நிலையில், ‘ப்ரண்ட்ஸ்’ படம் அதற்குள் சேர்ந்து ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
friends movie rerelease vijay surya devayan