‘God Mode’ on! சூர்யா- திரிஷா ஜோடி பாடல் காம்போவுக்கு ருக்மிணி வசந்த் கொடுத்த ரியாக்ஷனால் ரசிகர்கள் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரம் சூர்யா, தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘கருப்பு’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அழகிய திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது புதுமையான இசையால் ரசிகர்களிடம் ஏற்கனவே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல் “God Mode” இன்று வெளியானது.

சூர்யாவின் ஸ்டைல், திரிஷாவின் பிரேசன்ஸ், மியூசிக் என ரசிகர்களுக்கு இது ஒரு பண்டிகை விருந்து போல அமைந்துள்ளது.அந்த பாடலை பார்த்த நடிகை ருக்மிணி வசந்த், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நெருப்பு எமோஜியுடன் தனது ரியாக்ஷனை பகிர்ந்துள்ளார்.

அவரது இந்த ரியாக்ஷன் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.மேலும், சூர்யாவின் ரசிகர்கள் “இந்த தீபாவளி God Mode லெவல்!” என சமூக வலைதளங்களில் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

God Mode on Fans are shocked by Rukmini Vasanth reaction SuryaTrisha song combo


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->