'கனடாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பது போன்ற சூழ்நிலையை உணரவில்லை'; இந்திய தூதர்..! - Seithipunal
Seithipunal


கனடாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றி வருகிறது. மேலும், இதற்கான பணிகளை தீவிரப்படுத்தப் போவதாக அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு கனடாவை விட்டு 625 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதோடு, கடந்த 2024 -ஆம் ஆண்டு 1997 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்த வெளியேற்றப்பட்டியலில் 6,837 இந்தியர்கள் உள்ளதாகவும், இதனால் வெளியேற்றப்படும் இந்தியர்களின் இன்னும் அதிகமாகும் என கூறப்படுகிறது. இந்தியர்களை தொடர்ந்து மெக்சிகோவைச் சேர்ந்த 5,170 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 1,734 கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ளனர்.

இந்நிலையில் கனடாவுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் அளித்த பேட்டி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளதாவது: 'கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், பாதுகாப்பாக இருப்பது போன்ற சூழ்நிலையை உணரவில்லை. ஒரு நாட்டின் தூதருக்கு பாதுகாப்பு தேவைப்படும் சூழல் தான் கனடாவில் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியர்களை பிரச்சினையாக கனடா பார்க்கக்கூடாது. இது கனடாவின் பிரச்னை. அந்நாட்டைச் சேர்ந்த சிலர் இதனை கிளப்புகின்றனர்.

உண்மையில் பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஒரு குழு, உறவை பிணைக்கைதியாக வைத்து இருக்கும் சூழ்நிலையில், அவர்களை எப்படி சமாளிக்க முடியும் சட்டம் ஒழுங்கு நிலைமையை எப்படி சமாளிக்க முடியும்' என்று கூறியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Ambassador says Indians in Canada do not feel safe


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->