அரியானாவில் அதிர்ச்சி; அந்தரத்தில் ராட்டினம் உடைந்து விபத்து; 13 பேர் படுகாயம்; காப்பாற்ற சென்ற போலீஸ் அதிகாரி பலி..! - Seithipunal
Seithipunal


அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ராட்சத ராட்டினம் அந்தரத்தில் உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் ஒரு காயமடைந்துள்ளனர்.  

அரியானா மாநிலம் சூரஜ்குண்ட்-இல் பொருட்காட்சி மேளா நடந்து வருகிறது. இன்று மேளாவில் ராட்சத ராட்டினம் உயரத்தில் சுற்றிக்கொண்டிருந்த போது திடீரென உடைந்து விழுந்துள்ளது. இதில் இருந்தவர்கள் கீழே தூக்கி வீசப்பட்ட நிலையில், அங்கு பணியில் இருந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

அவர் ராட்டினத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் இருந்தபோது ராட்டினத்தின் பகுதி அவர் தலையில் இடித்தால் படுகாயமடைந்துய் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில்காயமடைந்த 13 பேர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்த மேளாவில் ஏராளமான மக்கள் கூடியிருந்த நிலையில் விபத்து நடந்த சமயத்தில், அங்கிருந்த மக்கள் சிதறி ஓடியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததே இந்த விபத்திற்குக் காரணம் என்று ஆரம்பகட்டத் விசாரணைகளில் தெரிவிக்கின்றன. இதுகுறித்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Haryana a Ferris wheel broke down resulting in 13 people being seriously injured and a police officer being killed


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->