இந்திய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைப்பு: பாகிஸ்தான் தலையில் இடியை போட்ட அமெரிக்க அரசு..!
The US government shocked Pakistan by including the occupied Kashmir region in the Indian map
ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டி அமெரிக்கா புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியையம் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் வாஷிங்டனுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டு அமெரிக்காவின் ஆதரவைப் பெற தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். ஆனாலும், சர்வதேச அளவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் ஆரம்பம் முதல் இறுதிவரை தோல்வியிலேயே முடிந்துள்ளன.
பாகிஸ்தான் பிரதமர், சில நாட்களுக்கு முன்பு, காஸ்மீர் ஒற்றுமை தின உரையில் இப்பகுதி குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசி இருந்தார். ஆனால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட இந்தியா-அமெரிக்கா வர்த்தக கட்டமைப்பின் அதிகாரப்பூர்வ விளக்கப்படத்தில், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டியுள்ளது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட இந்த வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய எல்லைக்குள் சேர்க்கப்பட்டுள்ளமை பாகிஸ்தானுக்கு பலத்த ராஜதந்திர அடியாக கருதப்படுகிறது.
அதாவது, இந்தியாவை, அமெரிக்காவின் முதன்மையான மற்றும் மாற்ற முடியாத உலகளாவிய கூட்டாளி என்பதை அமெரிக்க அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மதுபானம் மற்றும் கொட்டை வகைகளின் இறக்குமதி வரி குறைப்பு தொடர்பான வர்த்தக ஆவணங்களில் இந்த வரைபடத்தை பயன்படுத்தியதன் மூலம், இந்தியாவின் எல்லை ஒருமைப்பாட்டை அமெரிக்கா மீண்டும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளமை பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
English Summary
The US government shocked Pakistan by including the occupied Kashmir region in the Indian map