USA அணியை பதம் பார்த்த சிராஜின் வேகம்; USA-யின் ஆள் ரவுண்டரை அடித்து நொறுக்கிய சூர்யகுமார்; அபார வெற்றிப்பெற்ற இந்தியா..! - Seithipunal
Seithipunal


10-வது ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியது. 03-வது போட்டி, இன்று இரவு 07 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி அமெரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். 

06 ஆவது ஓவரில் மட்டும் 03 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.  இதில் இஷான் கிஷன் 20 ரன்னிலும்,  திலக் வர்மா 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து, துபே முதல் பந்தில் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். 

அடுத்ததாக இறங்கிய ரிங்கு சிங் 06 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யாவும் 05 ரன்னிலும்,  அக்சர் 14 ரன்னிலும் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். தனி ஒருவனாக போராடிய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் நிதானமாக ஆடி, அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 161 ரன்கள் அடித்தது. சூர்யகுமார் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 04 சிக்சர், 10 பவுண்டரியும் அடங்கும். இதன் மூலம் 25-வது அரை சத்தை பூர்த்தி செய்துள்ளார்.  அமெரிக்கா அணி சார்பில் வான் ஷால்க்விக் சிறப்பாக பந்துவீசி 04 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 162 ரன்கள் என்ற இலகு இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. இதில், மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஜோடி 04வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்க வில்லை. இதில், சஞ்சய்கிருஷ்ணமூர்த்தி 37 ரன்னும், மிலிந்த் குமார் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் ஷுபம் ரஞ்சனே 37 ரன்கள் எடுத்தார். இறுதியில், அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்து. இதன்மூலம் இந்திய அணி, 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங்,  அக்சர் படேல் தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India defeated the USA team winning by 29 runs


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->