விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத்திற்கு சென்ற தனியார் சொகுசு பஸ்சில் திடீரென தீ விபத்து; பஸ் முழுவதும் எரிந்து நாசம்; பயணிகளுக்கு என்ன ஆனது..? - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு, தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து தனியார் சொகுசுபஸ் பயணிகளுடன் நேற்றிரவு புறப்பட்டுள்ளது. குறித்த பஸ் விஜயவாடா அருகே காஞ்சிகச்செர்லா அடுத்த கேசரா டோல்கேட்டில் இன்று அதிகாலை கடந்துள்ளது. அப்போது, பஸ்சின் பின்புறத்தில் உள்ள இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது.

உடனடியாக இதை கவனித்த டிரைவர் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தியதோடு, பஸ்ஸில் இருந்த பயணிகளை உடனடியாக கீழே இறங்குமாறு சத்தமிட்டுள்ளார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அனைவரும் டிரைவரின் சத்தம் கேட்டு அலறியடித்து வேகமாக இறங்கியுள்ளனர். 

பயணிகள் இறங்கிய சில நிமிடங்களில், குறித்த பஸ் முழுவதும் தீ பரவி முழுமையாக தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட்டுள்ளனர்.

ஆனாலும், பஸ் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. உரிய நேரத்தில் டிரைவர் விடுத்த எச்சரிக்கையால் பஸ்சில் இருந்த 39 பயணிகளும் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அதிகாலை கேசரா டோல்கேட்டில் பதற்றம் நிலவியதோடு, போக்குவரத்தும், பாதிப்படைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A massive fire broke out in a private luxury bus traveling from Vijayawada to Hyderabad


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->