ஏமன் அருகே பற்றி எரிந்த எல்.பி.ஜி., டேங்கர் கப்பல்; இரண்டு பேர் மாயம்: 23 இந்தியர்கள் மீட்பு..?
LPG tanker catches fire near Yemen
கேமரூன் நாட்டை சேர்ந்த எல்பிஜி டேங்கர் எம்வி பால்கன் கப்பல் ஏமன் அருகே தீ பற்றியுள்ளது. நேற்று (அக்டோபர் 19) ஏமன் நாட்டின் ஏடனுக்கு தென்கிழக்கே சுமார் 113 கடல் மைல் தொலைவில் ஜிபூட்டிக்கு செல்லும் வழியில் பயணித்துள்ளது. அப்போது, திடீரென தீ பற்றியதாக கூறப்படுகிறது.
குறித்த கப்பலில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) முழுமையாக நிரப்பப்பட்டிருந்ததால், தீ பற்றியதை தொடர்ந்து டேங்கர் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய கடற்படையின் ஆஸ்பைட்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில்; அந்த கப்பலில் இருந்த இந்தியர்கள் 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட்டுள்ளதாகவும், அதில் இரண்டு பணியாளர்கள் இன்னும் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட இந்தியர்கள் ஜிபூட்டியன் கடலோர காவல்படையிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்ட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தீ பற்றியதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும், விசாரணை மற்றும் ஆய்வு நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
LPG tanker catches fire near Yemen