சர்வானந்த் புதிய அவதாரம்...! - தீபாவளி பரிசாக 36 திரைப்பட டைட்டில் அறிவிப்பு...!
Sharwanands new avatar 36 film titles announced Diwali gift
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் சர்வானந்த், தமிழில் “நாளை நமதே”, “எங்கேயும் எப்போதும்”, “ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை” போன்ற படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது அவர் தனது 36வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்கின்றனர்; இயக்கம் அபிலாஷ் கங்காரா. படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த படத்தில் சர்வானந்துக்கு ஜோடியாக அழகிய மாளவிகா நாயர் நடித்திருக்கிறார்.
மேலும், பிரம்மாஜி மற்றும் அதுல் குல்கர்னி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, படக்குழுவினர் ஒரு சிறப்பான பரிசாக படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர்.
அதன்படி, சர்வானந்த் நடிக்கும் 36வது படத்திற்கு “பைக்கர்” (Biker) என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரும் விரைவில் வெளியாக உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Sharwanands new avatar 36 film titles announced Diwali gift