இசையமைப்பாளர் இளையராஜாவின் அடுத்த சிம்பொனி நிகழ்ச்சி அறிவிப்பு..!
Ilayarajas next symphony concert announced
இசையமைப்பாளர் இளையராஜா தனது அடுத்த சிம்பொனி இசையில் சிம்பொனிக் டான்சர்ஸ் என்ற இசைக்கோர்வையை புதிய படைப்பாக எழுத உள்ளது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, 82 வயதிலும் படங்களுக்கு இசையமைத்தும், லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து வருகிறார்.
இவர் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில் இவருக்கு திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன், லண்டனில் சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவை பாராட்டும் விதமாகவும், அவரின் 50 ஆண்டு சாதனையை புகழும் விதமாகவும் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்நிலையில், இளையராஜா வெளியிட்ட தீபாவளி வாழ்த்து வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது: 'அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். அம்மாவின் நினைவு தினத்துக்கு செல்கிறேன். இந்த இனிய தீபாவளி நாளில் உங்களுக்கு எல்லாம் இன்னொரு செய்தி சொல்ல விரும்புகிறேன். எனது அடுத்த சிம்பொனி எழுதுவதற்கு, அம்மாவின் நினைவு தினத்தை முடித்து விட்டு வந்து துவங்கலாம் என இருக்கிறேன். இத்துடன் புதிய படைப்பாக சிம்பொனிக் டான்சர்ஸ் என்ற இசைக்கோர்வையை எழுதுவதாக இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக சொல்கிறேன். நன்றி வணக்கம்.' என்று அந்த வீடியோவில் இளையராஜா கூறியுள்ளார்.
English Summary
Ilayarajas next symphony concert announced