தலைநகர் டெல்லிக்கு இந்திரபிரஸ்தா என பெயர் மாற்றம்: கபில் மிஸ்ராவிடம் கோரிக்கை..!
Demand to change the name of Delhi to Indraprastha
'தலைநகர் டெல்லி பெயரை இந்திரபிரஸ்தா என மாற்ற வேண்டும்' என டெல்லி கலாச்சாரத்துறை அமைச்சர் கபில் மிஸ்ராவுக்கு, விஸ்வ இந்து பரிஷத் டெல்லி செயலாளர் சுரேந்திர குமார் குப்தா கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
'மகாபாரதத்தில் டெல்லி இந்திரபிரஸ்தா என அழைக்கப்பட்டுள்ளது. எனவே பழங்கால வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்பு படுத்தும் வகையில் தலைநகர் டெல்லி பெயரை இந்திரபிரஸ்தா என மாற்ற வேண்டும். அதேபோல் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லி ரயில் நிலையம், ஷானகான்பாத் வளர்ச்சி வாரியம் ஆகியவற்றுக்கும் இந்திரபிரஸ்தா என்ற பெயரை வைக்க வேண்டும். பெயர்கள் வெறும் மாற்றங்கள் மட்டும் அல்ல. அவை நாட்டின் உணர்வை வெளிப்படுத்துகின்றன.

இந்திரபிரஸ்தா என கூறினால், அதை 5,000 ஆண்டு கால வரலாற்றுடன் நாம் தொடர்புபடுத்த முடியும். முஸ்லிம் ஊடுருவல்காரர்களின் நினைவிடங்கள் அருகில் பாண்டவர் காலத்து நாயகர்கள், முனிவர்களின் நினைவிடங்களை அமைக்க வேண்டும். டெல்லியில் மன்னர் ஹேம சந்திரா விக்கிரமாதித்யாவுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்.' என்று குப்தா கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
Demand to change the name of Delhi to Indraprastha