பிஃபா கால்பந்து போட்டி: அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாறு படைத்த மொராக்கோ..!
Morocco creates history by defeating Argentina in FIFA football tournament
இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி சிலியின் சாண்டியாகோவில் உள்ள ஜூலியோ மார்டினெஸ் பிரடானோஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் அணிகளை நாக் அவுட் சுற்றில் வீழ்த்தி மொராக்கோ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப்போட்டியில் ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியை எதிர்த்து மொராக்கோ விளையாடியது. இந்த போட்டியில் அர்ஜென்டினாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, வரலாற்றில் முதல்முறையாக மொராக்கோ அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் யாசிர் சப்ரினி 12 மற்றும் 29-வது நிமிடங்களில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 2009-இல் கானா வென்றதற்குப் பிறகு இப்பட்டத்தை வென்ற முதல் ஆப்பிரிக்க அணி மொராக்கோ ஆகும்.
முன்னதாக, சில மாதங்களுக்குப் பிறகு, TotalEnergies CAF U-20 ஆப்பிரிக்கா கோப்பைப் போட்டியில் மொராக்கோ அணி இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. அதன்பிறகு, தற்போது U20 பட்டத்தை வென்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
English Summary
Morocco creates history by defeating Argentina in FIFA football tournament