ரெட் அலெர்ட்: போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை செய்யுங்க... தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்!
ADMK EPS warn to TNGovt for red alert heavy rain
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தலைநகர் சென்னை உள்ளிட்ட வடக் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதில், 8 மாவட்டங்களுக்கு இன்றும், 4 மாவட்டங்களுக்கு நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS warn to TNGovt for red alert heavy rain