மதுவை ஊற்றிய மகள் மேல் கோபம்...! -மனவேதனையில் தந்தை உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆலங்கோடு கண்ணோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (49). கட்டிடத் தொழிலாளியான இவர், மனைவி அகிலா (47), மகன், மகள் ஆகியோர்களுடன் அம்மாண்டிவிளை அருகே மூங்கில்விளை பகுதியில் வசித்து வந்தார்.மேலும், ராஜேந்திரனுக்கு நீண்டநாள் மது அருந்துதல் பழக்கமாக இருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, தினமும் மது குடித்து வீடு திரும்பியபின் மனைவியுடன் சண்டை போடுவது வழக்கம்.இந்நிலையில், சம்பவத்தன்று திங்கள்சந்தைக்கு சென்ற ராஜேந்திரன், திரும்பி வந்து வாங்கிய மதுபாட்டிலை வீட்டிலுள்ள பீரோவில் ஒளித்து வைத்தார். இதை கவனித்த அவரது மகள் பாட்டிலை எடுத்து வெளியே வந்து மதுவை தரையில் ஊற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேந்திரன், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் முட்டம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சையிலும் பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரது மனைவி அகிலா அளித்த புகாரின் அடிப்படையில் மணவாளக்குறிச்சி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anger daughter who poured wine sadness father taking his own life heartache What happened


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->