ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - விசாரணையில் சிக்கிய டிக்கெட் பரிசோதகர்..!!
ticket inspector arrested for harassment case
சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு கடந்த 3-ந்தேதி வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் திருப்பூர் முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முறப்பூரில் இருந்து முன்பதிவு செய்யபடாத டிக்கெட் எடுத்துள்ளனர்.
ஆனால், அந்த தம்பதியினர் அவசரத்தில் குளிர்சாதன பெட்டியில் ஏறியுள்ளனர். இந்த நிலையில் ரெயிலில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்த வேலூர் மாவட்டம் புளியமங்கலம் பகுதியை சேர்ந்த பாரதி என்பவர் அந்த தம்பதியினரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் எடுத்துவிட்டு, குளிர்சாதன பெட்டியில் ஏறியது தெரிய வந்தது.

உடனே டிக்கெட் பரிசோதகர் அவர்களை தனியாக மற்றொரு பெட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் கணவரை ஒரு பெட்டியில் இருக்க வைத்து விட்டு, அந்த பெண்ணை மற்றொரு பெட்டிக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தம்பதியினர் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் பாரதியை கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ticket inspector arrested for harassment case