எடுத்த புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டிய ஓரினச்சேர்க்கை தோழி...! நடந்தது என்ன?
girlfriend threatened to publish photo she took What happened
கடலூர் பண்ருட்டியை சேர்ந்த 18 வயது மாணவி, ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அந்த கல்லூரியில் ரெட்டிச்சாவடியை சேர்ந்த 3-ம் ஆண்டு படித்து வந்த 20 வயது மாணவி ஒருவரும் தோழிகள்.

இந்நிலையில் இருவரும் அவ்வபோது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.இதுபற்றி அறிந்து 18 வயது மாணவியின் அண்ணன் கண்டித்ததால், தனது தோழியுடன் நெருங்கி பழகுவதை நிறுத்தி விட்டார்.
இதில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற 20 வயது மாணவி, தனது தோழி ஓரினசேர்க்கைக்கு வர மறுத்த்தால், செல்போனில் தொடர்பு கொண்டு," தன்னுடன் நெருங்கி பழகாவிட்டால் நாம் இருவரும் உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன்" என்று மிரட்டியதாக அறியப்படுகிறது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் மனமுடைந்த 18 வயது மாணவி, தனது வீட்டில் தூக்குப்போட்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவலர்கள் வழக்குப்பதிவு, நேற்று 20 வயது மாணவியை பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து, ஓரினச்சேர்க்கையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் உள்ளதா? என ஆராய்ந்தனர். இதையடுத்து தோழியை போலீசார் கைது செய்தனர்.
English Summary
girlfriend threatened to publish photo she took What happened