நெஞ்சுவலி வந்தும் ஸ்டியரிங் விடாத டிரைவர்… 35 பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்...!
Despite experiencing chest pain driver did not let go steering wheel miracle that saved lives 35 passengers
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை 9.10 மணியளவில் மேட்டூர் நோக்கி அரசு பஸ் வழக்கம்போல் புறப்பட்டது. அந்தியூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த ராஜா டிரைவராகவும், சக்திவேல் நடத்துநராகவும் பணியாற்றினர். மொத்தம் 35 பயணிகளுடன் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது.

பஸ் அண்ணா மடுவு பகுதியை அடைந்தபோது, டிரைவர் ராஜாவுக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததை உணர்ந்த அவர், அபாயத்தை உணர்ந்து, பயணிகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி பஸ்சை அருகிலிருந்த தனியார் மருத்துவமனை முன்பு சாமர்த்தியமாக ஓரமாக நிறுத்தினார்.
அவரது வேதனையை கண்ட பயணிகள் உடனடியாக உதவிக்கு விரைந்து, ராஜாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சரியான நேரத்தில் எடுத்த புத்திசாலித்தனமான முடிவால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 35 பயணிகளும் பாதுகாப்பாக உயிர்தப்பினர்.
இதுகுறித்து அந்தியூர் பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாற்றுப் பஸ் ஏற்பாடு செய்து பயணிகள் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், டிரைவரின் விழிப்புணர்வு பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
English Summary
Despite experiencing chest pain driver did not let go steering wheel miracle that saved lives 35 passengers