''எப்படியாவது தவெக ஆட்சியை கவிழ்த்து விட வெறி கொண்டு அலைகிறார்கள்''; வைகோ..! - Seithipunal
Seithipunal


''நான் தற்போது தவெக கூட்டணியில் இருக்கிறேன். இந்த ஆட்சியில் குறைகள் தெரிந்தால் தொடர்புடைய அமைச்சரிடம் பேசுவேன் அல்லது முதல்வரை தொடர்புகொண்டு பேசுவேன். சாலையில் பேச மாட்டேன்'' மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளேபாளையம் கிராமப் பகுதியில், மதிமுக சார்பில், சீமைக் கருவேல மரங்களை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (ஜூலை 07) நடைபெற்றது. இதற்கு மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ சுனில் ஆனந்த் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், மதிமுக கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.டி.ரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றி பணியை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது;

யாருக்கோ தேள் கொட்டியது போல, எப்படி இந்த ஆட்சி இருப்பது என தவிக்கிறார்கள் என்றும், ஆட்சி அதிகாரம், எங்கள் சொத்து, எனது காலம், எனது பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் காலம் என தங்களிடமே இருக்க வேண்டும் என கருதுகிறார்கள் என்று எதிர்கட்சிகளை விமர்சித்துள்ளார்.

அத்துடன், எப்படியாவது தவெக ஆட்சியை கவிழ்த்து விட வெறி கொண்டு அலைகிறார்கள் என்றும், இதற்கு மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரிடம் உதவி கோருகிறார்கள் என்றும், சட்டப்பிரிவை 356-ஐ பயன்படுத்த வேண்டும் என திராவிட கொள்கைக்கு எதிராக மனசாட்சி இல்லாமல் வலியுறுத்துகிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாதது, கவிழ்ந்தாலும் அடுத்து வரும் தேர்தலில் 180 இடங்களுக்கு மேல் விஜய் வெற்றி பெறுவார் என்று கூறியதோடு, ''நான் தற்போது தவெக கூட்டணியில் இருக்கிறேன். இந்த ஆட்சியில் குறைகள் தெரிந்தால் தொடர்புடைய அமைச்சரிடம் பேசுவேன் அல்லது முதல்வரை தொடர்புகொண்டு பேசுவேன். சாலையில் பேச மாட்டேன்.'' என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், நியாயமே இல்லாமல் அரசியல் தற்கொலைக்கு சமமாக, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை முதல்வராக்க முயற்சித்தார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது கஜானா மூடப்பட்டுவிட்டது. பல ஆயிரம் கோடிகள் வருவாய் தந்த கருவூலம் மூடப்பட்டுவிட்டதாக வைகோ தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaiko says they are roaming around with a desire to somehow overthrow the Tvk regime


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->