'டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களின் விலை உயராது'; அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாகவும், இது அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ளதாக கூறிய அமைச்சர் விக்னேஷ், ஊதிய உயர்வால் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களின் விலை உயராது என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;

டாஸ்மாக்கில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதோடு, கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார் என்றும், இது அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ளதாக  கூறியுள்ளார்.

மேலும், டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கும் பிரச்சினை தொடருகிறது என்றும், பாட்டிலுக்கு மேல் கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும், ஊழியர்களின் பிரச்சினையை படிப்படியாக தீர்க்கவும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், டாஸ்மாக் துணை விற்பனையாளர்கள் சம்பளம் ரூ.17,925 ஆகவும், டாஸ்மாக் விற்பனையாளர்கள் சம்பளம் ரூ.19,413 ஆகவும், டாஸ்மாக் மேற்பார்வையாளர் சம்பளம் ரூ.22,313 ஆக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இதுவரை, இந்த துறையில், இப்படியொரு ஊதிய உயர்வு வழங்கப்பட்டதில்லை. ஊதிய உயர்வு மூலம் ரூ.110.74 கோடி கூடுதலாக செலவு ஆகிறது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு இஎஸ்ஐ வசதி என்ற கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்,  அரசு சொன்ன விலைக்கு தான் மதுபானங்களை விற்க வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புதான் இது என்று கூறியுள்ளார்.

அத்துடன், 21 வயதுக்கு உட்பட்டோரை பப் உள்ளிட்டவற்றில் அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும்,  இது கடுமையான எச்சரிக்கை எனவும், அந்த நிறுவனங்கள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊதிய உயர்வால் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களின் விலை உயராது என்று குறிப்பிட்டுள்ளதோடு,  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளதாகவும், . டாஸ்மாக் துறையை சீர்படுத்த உள்ளதாகவும், இந்த துறையில் ஒவ்வொன்றாக சீர்படுத்தப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Vignesh announced that the 25 percentage wage hike for TASMAC employees will not result in an increase in the prices of liquor at TASMAC liquor stores


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->