''எங்கிருந்தும் பத்திரப்பதிவு''; தமிழ்நாடு அரசு அரசாணை..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு "எங்கிருந்தும் பத்திரப்பதிவு" திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இனி பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையவழியில் ஆவணங்களை பதிவு செய்வது தொடர்பான நிர்வாக ரீதியான ஒப்புதலை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளதாவது;

முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக இந்த அரசு செயல்படும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அனைத்து துறைகளிலும் அதனை செயல்படுத்தும் விதமாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி அறிவுரை வழங்கி வருகிறார் என்றும், அந்த வகையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஆய்வுக் கூட்டம் நேற்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று எனது தலைமையில் பதிவுத்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் அலுவலகங்கள் மற்றும் பெருமளவில் ஆவணப்பதிவு மேற்கொள்ளப்படும் அலுவலங்களில், நிரந்தர சார்பதிவாளர்கள் பணியமர்த்தப்படுவதை உறுதி செய்யும் விதமாக இம்மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

இதன்மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சேவைகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணி மாறுதல் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடித்தும், நிர்வாக நலனை முன்னிறுத்தியும் பிறப்பிக்கப்பட்டுள்ள இம்மாறுதல் ஆணைகள் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை நிலை நிறுத்திட வழிவகுக்கிறது.

மேலும், பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப்பதிவு" (Anywhere Registration) கட்டாயமாக்கல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் இணையவழியில் தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்யும் வசதியான வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration) நடைமுறை 17-08-2026 முதல் கீழ்க்கண்டவாறு கட்டாயமாக்கப்படுகிறது.

இந்த புதிய நடைமுறை மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆவணங்களைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள முடியும். இதனால் குறிப்பிட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் கணிசமாகக் குறையும்.

அலுவலகங்களுக்கிடையேயான பணிச்சுமை சமநிலைப்படுத்தப்பட்டு மேலும், பதிவுப் பணிகள் விரைவாக நடைபெறும். அதேவேளையில் பொதுமக்களின் காத்திருப்பு நேரம் குறைவதுடன் பதிவுச் சேவைகளின் தரம் செயல்திறன் மற்றும் சேவை வழங்கும் திறனும் மேம்படும்” என தெரிவித்தார். இந்நிலையில், எங்கிருந்தும் பத்திரப்பதிவு மேற்கொள்வது தொடர்பான நிர்வாக ரீதியான ஒப்புதலை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Government Order on Deed Registration from Anywhere


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->