வாக்காளர் பட்டியல் சர்ச்சை: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மம்தா நேரடி வாதம்...!
Voter list controversy Mamata argues directly against Election Commission Supreme Court
வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) மேற்கொண்டு வருகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் நடைபெறும் இந்த நடவடிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
“உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. முரண்பாடுகள் என்ற பெயரில் நோட்டீஸ் அனுப்பி மக்களை நீண்ட வரிசையில் நிற்க வைக்கிறார்கள்.

இந்த நடைமுறையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்,” என அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், SIR செயல்முறையால் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அதிரடி குற்றச்சாட்டு முன்வைத்தார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுடன் மம்தா பானர்ஜி டெல்லி சென்று, தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ் குமாரை சந்தித்து முறையிட்டார்.
ஆனால் பேச்சுவார்த்தை எதிர்பார்த்த முடிவை அளிக்காததால், சந்திப்பின் பாதியிலேயே அவர் வெளியேறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில், SIR தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மம்தா பானர்ஜி தானே வழக்கறிஞராக ஆஜராகி தனது தரப்பில் வாதங்களை முன்வைத்தார்.
“ஆறு முறை கடிதம் அனுப்பியும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை; பலர் வாதிட்டும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை,” என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், “SIR தொடர்பாக ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எந்த வாக்காளரும் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு,” எனக் குறிப்பிட்டனர்.
English Summary
Voter list controversy Mamata argues directly against Election Commission Supreme Court