அதிரடியாக உயர்ந்தது விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் - எப்போது முதல் தெரியுமா?
toll gate fees increase in vikravandi
சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி எப்போதும் பரபரப்பாக காணப்படும். நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி இந்தச் சுங்கச்சாவடி வழியாக செல்லும். இந்த நிலையில் வருகிற 1ஆம் தேதி முதல், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் உயருகிறது. கார்/ பயணிகள் வேன்- ஒரு முறை செல்ல 105 ரூபாய். திரும்பி வருவதாக இருந்தால் 160 ரூபாய். மாதாந்திர பாஸ் 3170 ரூபாய் ஆகும்.
லைட் கமர்சியல் வாகனங்கள்- ஒருமுறை செல்ல 185 ரூபாயாகவும், திரும்பி வருவதாக இருந்தால் 275 ரூபாயாகவும், மாதாந்திர பாஸ் ரூ. 5545 ஆகும்.
டிரக் மற்றும் பேருந்து - ஒரு முறை செல்ல 370 ரூபாய். திரும்பி வருவதாக இருந்தால் 555 ரூபாய். மாதாந்திர பாஸ் ரூ. 11085.
மல்டிபிள் ஆக்சில் வாகனங்கள் ஒருமுறை செல்ல 595 ரூபாய். திரும்பி வருவதாக இருந்தால் 890 ரூபாய். மாதாந்திர பாஸ் 17820 ரூபாய்.
பள்ளி பேருந்துகளுக்கு கிடையாது. மாதாந்திர பாஸ் 1000 ரூபாய் மட்டும்.
English Summary
toll gate fees increase in vikravandi