'ஃபெயிலியர் மாடல்' திமுக அரசு..தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக மத்திய அரசிடம் கையேந்தும் நிலை..விளாசிய எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


கோவை–திருப்பூர் ஜவுளித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்ற காரணத்தால், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, நூல் விலையின் நிலையற்ற தன்மை போன்ற பிரச்சினைகள் ஏற்கனவே ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்களை பாதித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக மத்திய அரசிடம் கையேந்தும் நிலை தான் ‘ஏமாற்று மாடல் அரசு’ எனப்படும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுகிறது” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரி உயர்வு காரணமாக திருப்பூர் ஏற்றுமதி பாதிக்கப்படும் என ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை வைத்திருப்பதையும் பழனிசாமி சாடியுள்ளார். அவர் கூறியதாவது:

“வணிகக் கட்டடங்களுக்கு 150% வரி உயர்த்தியது, ஆண்டுதோறும் 6% சொத்துவரி உயர்வு செய்தது, மின்சாரக் கட்டணங்களை அடிக்கடி அதிகரித்தது, நூல் விலையில் நிலைத்தன்மை இல்லாதபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது – இவை அனைத்தும் திமுக அரசின் தோல்விகள்.

வெளிநாட்டு பயணங்களில் பலமுறை சென்றும், கோவை–திருப்பூர் தொழில்களுக்கு எந்தவிதமான வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்காத நிலையில், மத்தியப் பிரதேச அரசு முன்னணி ஜவுளி சங்கங்களுடன் இணைந்து பருத்தி வளர்ச்சிக்கும், முதலீட்டையும் ஈர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதனால் தமிழக முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல், ஒப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் உற்பத்தி நிறுத்த போராட்டங்களை நடத்தினாலும், அவற்றின் கோரிக்கைகளை மாநில அரசு புறக்கணித்ததாகவும் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இறுதியாக, அவர் வலியுறுத்தியதாவது: “அமெரிக்க இறக்குமதி வரி உயர்வால் பாதிப்படைந்தது உண்மைதான். ஆனால் உண்மையில் கோவை, திருப்பூர் பின்னலாடைத் தொழில்கள் கடுமையாக பாதிக்க காரணமானது திமுக அரசின் தவறான கொள்கைகளே. தொழில்துறையை காப்பாற்ற உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Failed Model DMK government instead of supporting industries it is resorting to the central government Edappadi Palaniswami has revealed


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->