அமெரிக்காவுக்கு அடிபணியாத இந்தியா..டிரம்ப் போட்ட ரூல்ஸ்.. மீட்டிங்கில் இருந்து வெளியேற்றம்.. என்ன நடந்தது?
India did not submit to America Trump rules Expulsion from the meeting What happened
அமெரிக்காவின் வர்த்தக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாமல், நேரடியாக பேச்சுவார்த்தையை நிறுத்தி வெளியேறியுள்ளது என்று, இந்திய நிதித்துறை முன்னாள் செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். குறிப்பாக, இந்தியா ரஷ்ய எண்ணெயை நேரடியாகவோ மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைக்கு அச்சுறுத்தலாகும் எனக் கூறி, இந்தியாவுக்கு எதிராக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், சுபாஷ் கார்க் கூறியதாவது:டிரம்ப் தொடர்ந்து இந்தியாவை விமர்சிப்பது “அரசியல் நாடகம்” மட்டுமே, பொருளாதார யதார்த்தம் அல்ல.ரஷ்ய எண்ணெய் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கும் சேமிப்பு ஆண்டுக்கு 2.5 பில்லியன் டாலர் மட்டுமே, டிரம்ப் கூறுவது போல 25 பில்லியன் அல்ல.
கப்பல் போக்குவரத்து, காப்பீடு, கலப்பு செலவுகள் அனைத்தையும் கணக்கில் எடுத்தால், ஒரு பீப்பாய்க்கு இந்தியாவிற்கு கிடைக்கும் தள்ளுபடி வெறும் 3-4 டாலர் தான்.
இந்தியா எந்த சர்வதேச ஒப்பந்தத்தையும் மீறவில்லை; உலகளாவிய விலை கட்டுப்பாட்டு கட்டமைப்புக்குள் தான் ரஷ்ய எண்ணெயை வாங்கி வருகிறது.
இதனால்தான், அமெரிக்காவின் வரி அழுத்தங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளாமல், பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், அமெரிக்க அழுத்தங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தியான்ஜின் நகரில் இருதரப்பு சந்திப்பு நடத்தினார். இது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, சனிக்கிழமை சீனாவுக்கு சென்றடைந்தார். கால்வான் மோதலுக்குப் பிறகு, ஏழு ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பின், மோடி சீனாவுக்குச் செல்லும் இதுவே முதல் முறை.
இந்தச் சந்திப்பில், ஜி ஜின்பிங்,“இன்று உலகம் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் மாற்றங்களால் சூழப்பட்டுள்ளது. சர்வதேச சூழல் நிலையற்றதாகவும் குழப்பமானதாகவும் உள்ளது. சீனா–இந்தியா இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நமது உறவை நீண்டகால மூலோபாயக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
India did not submit to America Trump rules Expulsion from the meeting What happened