ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் மீது சுடுதண்ணீர் ஊற்றிய காம கொடூரன்..! நெல்லையில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்து வருபவர் விஸ்வ லட்சுமணன். இவரது மனைவியின் பெயர் கலையரசி என்கிற சத்யா (வயது 29). கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தின் விஸ்வ லட்சுமணன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

மேலும்., கணவன் - மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக சத்யா., திருநெல்வேலி நகரம் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் பகுதியில் இருக்கும் தனது தங்கையுடன் வசித்து வந்துள்ளார். 

இந்த சமயத்தில்., இவர்களின் குடும்ப நண்பரான சாத்தான்குளம் அருகேயுள்ள சாந்தி நகர் பகுதியை சார்ந்த ராமசந்திரன் (வயது 33) என்பவர் அடிக்கடி இல்லத்திற்கு வந்து செல்லும் வழக்கத்தை வைத்துள்ளார். 

இந்த நிலையில்., கடந்த 5 ஆம் தேதியன்று சத்யா இல்லத்தில் தனியாக இருந் அந்நிலையில்., வீட்டிற்கு வந்த ராமச்சந்திரன் தனது காம எண்ணத்தை அரங்கேற்ற சத்யாவின் கையை பிடித்து சில்மிஷம் செய்துள்ளான். 

 sexual harassment, பாலியல் வன்கொடுமை,

இதற்கு சத்யா மறுப்பு தெரிவிக்கவே., சத்யாவை தாக்கி அவதூறாக பேசியுள்ளான். மேலும்., வீட்டின் சமயலறையில் அடுப்பில் இருந்த வெண்ணீரை எடுத்து சத்யாவின் மீது ஊற்றியுள்ளான். 

இதனால் பலத்த காயமடைந்த சத்யா அலறித்துடிக்கவே., பதறிப்போன அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்தனர். இவர்கள் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த கொடூரன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான். 

சத்யாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவான ராமச்சந்திரனை இன்று கைது செய்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in thriunelveli girl sexual torture and boiled water trowed by culprit


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->