கிரிக்கெட்டில் ஏமாற்றம்; இன்று ரூ. 1300 கோடி வசூல் படத்தின் இயக்குநர்; யார் இந்த ஆதித்யா தார்..? - Seithipunal
Seithipunal


இந்தியா சினிமாவில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரவும் திரைப்படம் துரந்தர். இந்த படத்தின் முதல் பாகம் இதுவரை ரூ. 1300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த 2025 டிசம்பர் 05-ஆம் தேதி 'துரந்தர்' (Dhurandhar) வெளியானது. உலக அளவில் ரூ. 1300 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்தியத் திரையுலகையே அதிரவைத்துள்ள இந்த பாடத்தின் இரண்டாம் பாகம் வரும் 19 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, ஆர். மாதவன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் இந்த படத்தில் நடத்துள்ளனர். பாகிஸ்தானுக்கான ஸ்பை-ஆக்ஷன் திரைப்படமாக மிக பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ளது. அதனபடி, அல்லு அர்ஜுனின்  'புஷ்பா 2', ஷாருக்கானின் 'பதான்' மற்றும் 'ஜவான்' போன்ற மெகா ஹிட் படங்களின் சாதனைகளை முறியடித்து, உலக அளவில் அதிக வசூல் செய்த இந்தித் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.

இதன் தொடர்ச்சியாக, இதன் இரண்டாம் பாகமான 'Dhurandhar: The Revenge' வரும் மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளது. 

The Surgical Strike படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆதித்யா தார் Article 370, Dhoom Dhaam, Baramulla போன்ற படங்ககளை தயாரித்தோடு, எழுதியும் உள்ளார். இதனை அடுத்து, துரந்தர் என்ற வெற்றிப்படத்தை இயக்கி அதனை தயாரித்தும் உள்ளார். 

இயக்குநர் ஆதித்யா தார் ஆரம்ப கால கட்டத்தில் ஒரு திறமையான கிரிக்கெட் வீரராக உருவெடுத்து வந்தவர். இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான (Under-19) கிரிக்கெட் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவிருந்த நேரத்தில், சில காரணங்களால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த ஏமாற்றத்தில் வீட்டில் இருந்த ஆதித்யா தார் அப்போது 'கார்டிஷ்' என்ற படத்தைப் பார்த்துள்ளார். அதிலிருந்து அவருக்கு சினிமா மீது ஆர்வம் பிறந்து, மும்பைக்குப் பயணமாகியுள்ளார். அங்கு ஆரம்பத்தில் அவர் எழுதிய கதைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்பட்ட நிலையில்,பிரபல இயக்குநர் பிரியதர்ஷனிடம் மூன்று ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றி தனது திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.

கிரிக்கெட்டில் சிறந்த வீரராக வரவேண்டும் என்ற ஆதித்யா தார் கனவு ஏமாற்றத்தில் முடிந்தாலும், இன்று 'துரந்தர்' என்ற வெற்றிப்படத்தின் மூலம் அவர் ரூ. 1300 கோடி வசூல் படத்தை இயக்கிய இயக்குனர் என்ற பெருமையை பெற்று தனது வெற்றியை அடைந்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Background of Aditya Dhar Director of the Film Durandhar


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->