'திமுகவின் பெரிய பலமே பெண்கள்; இஸ்லாமியர்கள்- திமுக உடனான உறவு என்றும் தொடரும்'; இப்தார் நிகழ்ச்சியில் முதல்வர் பேச்சு..! - Seithipunal
Seithipunal


சென்னை, அமைந்தகரையில் தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு சார்பில் நடைபெற்ற  இஃப்தார் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து அங்கு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக ஆளும் மாநிலங்களில், இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், திமுகவின் பெரிய பலமே பெண்கள் என்றும் இஸ்லாமியர்கள்- திமுக உடனான உறவு என்றும் தெரிவித்தார்.

அதாவது, திமுக- இஸ்லாமியர் உறவு என்பது தலைமுறை கடந்த உறவு என்றும், அனைத்து சிறுபான்மை இயக்கங்களும் ஒரே மேடையில் இணைந்துள்ளனர். இஸ்லாமிய இயக்கங்களின் ஒற்றுமை தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே அவசியம் என்று கூறினார்.

மேலும், இஸ்லாமியர்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் நிம்மதியாக கிறிஸ்துமஸ் கொண்டாட முடியவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறந்தாரா? என்று கேள்வி எழுப்பினர்.

அதிமுகவை மட்டுமல்லாமல் தனது மனசாட்சியையும் எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் அடகு வைத்திருக்கிறார் என்று விமர்சித்தார். இந்த நிகழ்ச்சியில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் உரையாற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women are the greatest strength of the DMK stated Chief Minister Stalin during his speech at an Iftar event


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->