'அஜித் அப்படி.. விஜய் இப்படி'...! - டாப் ஹீரோக்கள் குறித்து ஓப்பனாகப் பேசிய தமன்னா...!
Ajith like that Vijay like this Tamanna speaks candidly about top heroes
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'புருஷன்' படத்தில் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா, சமீபத்தில் தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் குறித்து அவர் பகிர்ந்த சுவாரசியமான தகவல்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

நடிகர் விஜய் பற்றி குறிப்பிடுகையில், அவர் மிகவும் எளிமையான மற்றும் மென்மையான மனிதர் என்றும், நடனத்தைப் பொறுத்தவரை விஜய்யும் ஜூனியர் என்.டி.ஆரும் தான் ஈடுஇணையற்ற சிறந்த கலைஞர்கள் என்றும் தமன்னா புகழாரம் சூட்டினார்.
அதேபோல், நடிகர் அஜித் குறித்துப் பேசிய அவர், 'வீரம்' படப்பிடிப்பின் போது கேரவனிலேயே தமன்னாவிற்கு அஜித் இட்லி சமைத்துக் கொடுத்த நெகிழ்ச்சியான நினைவை நினைவு கூர்ந்தார்.
சமையல் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித், ஒரு மிகச்சிறந்த மனிதர் மற்றும் அன்பான குடும்பஸ்தர் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தனது திரைப்பயணத்தில் விஜய்யின் 50-வது படமான 'சுறா' மற்றும் அஜித்தின் 54-வது படமான 'வீரம்' ஆகியவற்றில் நாயகியாக நடித்ததை நினைவுகூர்ந்த தமன்னா, தனது அறிமுக படமான 'கல்லூரி'யைக் குறிப்பிட்டு, மாணவர்கள் தங்களது கல்லூரி வாழ்க்கையை முழுமையாக ரசித்து வாழ வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
English Summary
Ajith like that Vijay like this Tamanna speaks candidly about top heroes