சிலிண்டர் தட்டுப்பாடு ....பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்திய மத்திய அரசு...! - மு.க.ஸ்டாலின் கண்டனம்
Cylinder Shortage Central Government Causes Hardship Public MK Stalin Condemns
LPG சிலிண்டர்கள் தட்டுப்பாட்டை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் தேமுதிக, மதிமுக,விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தி.மு.க. கூட்டணியினர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தைக் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு, மத்திய அரசின் தவறான முடிவுகளை கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டதாவது,"வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப்படும் மத்திய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால், பொதுமக்களுக்கு கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்கு மட்டுமே தொல்லை ஏற்பட்டு உள்ளது".
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டெங்கும் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டங்களில், மக்கள் கோபத்தை உணர்ந்து மத்திய அரசு உடனடியாக நிலைமையை சீர்செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Cylinder Shortage Central Government Causes Hardship Public MK Stalin Condemns