பெரம்பலூரில் பதறவைக்கும் சம்பவம்..! காதலன் கண் முன்னே கொடூரம்... இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்....! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே துறையூர் சாலையைச் சேர்ந்த 21 வயது வாலிபர், தனது காதலியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பாடாலூர் அருகே உள்ள காரை கிராமத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு இருவரும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் இருவரையும் மிரட்டித் தாக்கியதோடு, வாலிபரின் கண் முன்னேயே அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது ஊரில் விட்டுவிட்டு, தனது நண்பர்களுடன் மீண்டும் அதே பகுதிக்கு வந்த வாலிபர், அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு நபரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், மோதலில் ஈடுபட்ட அனைவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தனது காதலிக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கேட்கவே நண்பர்களுடன் வந்ததாக அந்த வாலிபர் தெரிவித்தார்.

இருப்பினும், தனது காதலியின் விபரம் தெரிந்தால் அவரது குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும் எனக் கருதிய அவர், பெண்ணைப் பற்றிய தகவல்களைத் தரவும், புகார் அளிக்கவும் மறுத்துவிட்டார்.

இதனால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள சூழலில், உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் பாடாலூர் காவலர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று வாலிபர்களைப் பிடித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Perambalur Atrocity Unfolds Before Her Lover Eyes Young Woman Subjected Harassment


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->