அடுத்த முறை நெற்றியில்தான் தோட்டா பாயும்...! - பாடகர் பாட்ஷாவுக்கு பிஷ்னோய் கும்பல் விடுத்த பகீர் மிரட்டல் - Seithipunal
Seithipunal


இந்திய அளவில் புகழ்பெற்ற ராப் பாடகர் பாட்ஷா, தனது சமீபத்திய ஹரியான்வி பாடலான 'ததீரி' (Tateeree) தொடர்பாகப் பெரும் சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

இந்தப் பாடலில் பெண்கள் மற்றும் சிறார்களைப் பற்றி ஆட்சேபனைக்குரிய வரிகளைப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பஞ்ச்குலாவைச் சேர்ந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பாடலால் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என பாட்ஷா ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ள போதிலும், அவருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், முகநூலில் பதிவிட்டுள்ள பிஷ்னோய் கும்பல், ஹரியானா கலாச்சாரத்தைச் சிதைக்க முயன்றால் பாட்ஷாவின் நெற்றியில் நேரடியாகச் சுடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளது.

முன்னதாக 2024-ஆம் ஆண்டில் சண்டிகரில் உள்ள பாட்ஷாவிற்குச் சொந்தமான கிளப் ஒன்றின் வெளியே நடந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு கோல்டி பிரார் பொறுப்பேற்றிருந்த நிலையில், தற்போது விடுக்கப்பட்டுள்ள இந்த நேரடி மிரட்டல் பாட்ஷாவின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதன் காரணமாகத் திரையுலகிலும் இசைத் துறையிலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Next time bullet strike forehead Bishnoi gang chilling threat singer Badshah


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->