நின்ற இடத்தில் விடிய விடிய ஓடிய பைக்... பறிபோன 4 உயிர்கள்: ஆந்திராவில் நேர்ந்த நெஞ்சை உலுக்கும் சோகம்!
Mechanics Fatal Advice 4 of a Family Dead After Inhaling Bike Fumes Overnight
ஆந்திர மாநிலத்தில் மெக்கானிக் ஒருவர் கொடுத்த தவறான ஆலோசனையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் நச்சுப் புகையைச் சுவாசித்து உறக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தின் பின்னணி:
முரளி என்பவர் தனது பைக்கை சர்வீஸ் செய்துள்ளார். அப்போது அந்த மெக்கானிக், "எஞ்சின் சீராக இயங்க வேண்டும் என்றால், இரவு முழுவதும் எஞ்சினை அணைக்காமல் ஓடவிடுங்கள்" என்று ஒரு விபரீதமான ஆலோசனையை வழங்கியுள்ளார். இதனை அப்படியே நம்பிய முரளி, பாதுகாப்பிற்காகப் பைக்கை வீட்டின் உள்ளேயே நிறுத்தி, எஞ்சினை ஆன் செய்து வைத்துவிட்டுத் தூங்கச் சென்றுள்ளார்.
பலியான உயிர்கள்:
மூடிய அறைக்குள் பைக் ஓடியதால் வெளியேறிய கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுப் புகை வீடு முழுவதும் பரவியது. தரைத்தளத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முரளியின் 15 வயது மகன். 7 வயது இரட்டைக் பெண் குழந்தைகள். முரளியின் 75 வயது தந்தை அந்தப் புகையைச் சுவாசித்ததால் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்:
தப்பித்த தம்பதி:
வீட்டின் முதல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த முரளியும் அவரது மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காலையில் எழுந்து பார்த்தபோதுதான் தரைத்தளத்தில் இருந்த நான்கு பேரும் சலனமற்று கிடப்பதைக் கண்டு கதறித் துடித்துள்ளனர்.
மெக்கானிக்கின் ஒரு தவறான அறிவுரை, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே சிதைத்துவிட்டது. மூடிய இடங்களுக்குள் வாகன எஞ்சின்களை ஓடவிடுவது உயிரைப் பறிக்கும் 'நச்சு அறை'யாக (Gas Chamber) மாறும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடம்.
English Summary
Mechanics Fatal Advice 4 of a Family Dead After Inhaling Bike Fumes Overnight