திறனற்ற திமுக ஆட்சியில் காமுகர்களாக மாறிய காவலர்கள் - நயினார் நாகேந்திரன் கொந்தளிப்பு! - Seithipunal
Seithipunal


பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "கோவையில் காவல் நிலைய அலுவலக அறையில் வைத்தே பெண் காவலரை மதுக்கரை சிறப்பு காவல்துறை கமாண்டண்ட் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்று போலியாக முழங்கும் திமுக ஆட்சியின் நிர்வாகத் திறனின்மையால் தெருதோறும் காமுகர்கள் பெருகி வருவது ஒருபுறமிருக்க, மறுபுறம் காவல் அதிகாரிகளே காமுகர்களாக மாறிவருவது பெண்கள் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாகக் கேள்விக்குறியாக்குகிறது.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை! காவல் நிலையத்தில் காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை! தமிழகத்தின் வரலாற்றில் இப்படி ஒரு கொடூரத்தை இதுவரை யாரும் பார்த்ததும் இல்லை! இனி இந்தக் கேடுகெட்ட திமுக ஆட்சி தொடரப்போவதுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Nainar Condemn to DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->