சமையலறை கழிவே சமையல் எரிவாயு...! இனி LPG தட்டுப்பாட்டுக்கு தீர்வாக ‘ஹோம் பயோ கியாஸ்’...! - Seithipunal
Seithipunal


வளைகுடா நாடுகளில் நாளுக்கு நாள் தீவிரமடையும் போர் சூழ்நிலை காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் தடைகள் உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் மெதுவாக வெளிப்படத் தொடங்கி, சில பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு பற்றிய கவலை எழுந்துள்ளது.

இந்த சூழலில், பாரம்பரிய எரிவாயுவுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றதும், வீட்டிலேயே தயாரிக்கக்கூடியதுமான ‘பயோ கியாஸ்’ மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.உலகின் பல நாடுகளில், வீடுகளில் உருவாகும் இயற்கை மற்றும் உணவுக் கழிவுகளை பயன்படுத்தி இலவசமாக எரிவாயு தயாரிக்கும் “ஹோம் பயோ கியாஸ்” அமைப்புகள் பரவலாக பயன்பாட்டில் உள்ளன.

இந்த முறையில் சமையலறையில் மீதமுள்ள உணவு கழிவுகள், காய்கறி தோல்கள் போன்ற கரிமப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.ஹோம் பயோ கியாஸ் தயாரிப்பு ‘காற்றில்லா செரிமானம்’ (Anaerobic Digestion) என்ற இயற்கை செயல்முறையின் அடிப்படையில் நடைபெறுகிறது.

இதில் தாவர மற்றும் விலங்குகளின் கரிமக் கழிவுகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் காற்று புகாத சூழலில் வைக்கப்படுகின்றன. அப்போது அவற்றில் உள்ள நுண்ணுயிரிகள் அவற்றை சிதைத்து நொதிக்கச் செய்கின்றன. இந்த செயல்முறையின் விளைவாக மீத்தேன் மற்றும் கார்பன் டைஆக்சைடு போன்ற வாயுக்கள் உருவாகின்றன.

வீட்டுத் தேவைக்கு உயிரி எரிவாயு தயாரிக்க மிகவும் எளிய அமைப்பு போதுமானது. இதில் முக்கிய பங்காற்றுவது ‘பயோ டைஜஸ்டர்’ எனப்படும் காற்று புகாத கலன். சமையலறையில் இருந்து கிடைக்கும் உணவுக் கழிவுகள், காய்கறி தோல்கள் போன்றவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து அந்த கலனில் போட வேண்டும்.

சுமார் 7 முதல் 10 நாட்களில் அவை மக்கி மீத்தேன் வாயு உருவாகும்.உருவாகும் இந்த உயிரி எரிவாயுவை குழாய்கள் மூலம் அடுப்புடன் இணைத்து நேரடியாக சமையலுக்கு பயன்படுத்த முடியும். இதனால் எரிவாயு செலவு குறைவதுடன், வீட்டுக் கழிவுகளும் பயனுள்ள சக்தியாக மாறி சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kitchen Waste Becomes Cooking Gas Introducing Home Biogas Solution LPG Shortages


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->