நேபாளத்தில் உயிரிழந்த 07 தமிழர்களின் உடல்களை சென்னைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை..!
Tamil Nadu Government Takes Steps to Bring Back Bodies of 7 Tamils Who Died in Nepal
நேபாளத்தில் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 04 பெண்கள் உட்பட 07 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 24 பேர், ஆன்மிக பயணமாக, கடந்த 07 ஆம் தேதி நேபாள நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அங்கு பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்திய நிலையில்,
ஞாயிற்றுக்கிழமை காலை (இன்று) கந்தகி மாகாணத்தில் உள்ள மனகாமனா கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, அங்கிருந்து இரண்டு பேருந்துகளில் காத்மாண்டு நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த போது, சாலை வளைவில் ஒரு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. குறித்த பேருந்து மலையிலிருந்து சுமார் 400 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.
இந்த கோர விபத்தில், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், அவரது மனைவி மீனா, பாபு, தேவகோட்டையைச் சேர்ந்த அண்ணாமலை, அவரது மனைவி விஜயா, அவரது சகோதரி மீனாட்சி என்பதும் மற்றொருவர் தமிழரசி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆன்மிக பயணமாக நேபாளம் சென்ற 24 பேரில் 07 பேர் உயிரிழந்துள்ளதால், அவர்களது உறவினர்கள் மற்றும் சொந்த கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நேபாளத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 07 தமிழர்களின் உடல்களை சென்னைக்கு விமானத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Tamil Nadu Government Takes Steps to Bring Back Bodies of 7 Tamils Who Died in Nepal