''என் விரல்களை எண்ணிப் பார்க்க விரும்புகிறீர்களா..? உயிருடன் உள்ளேன், ஆதாரம் போதுமா..?'' வீடியோ வெளியிட்டுள்ள பெஞ்சமின் நெதன்யாகு..! - Seithipunal
Seithipunal


அணு ஆயுத போட்டி காரணமாக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா கடந்த 28 ஆம் தேதி முதல் ஈரான் மீது  சரமாரித் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஏராளமான கட்டிடங்கள், வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

ஆனால், ஈரான் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் நடுவானில் வழிமறித்து அழித்துள்ளது. இந்த சூழலில் அண்மையில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுதொடர்பாக சமூக ஊடகங்களிலும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, போர் நடவடிக்கைகள் குறித்து நெதன்யாகு பேசும் வீடியோ ஒன்று வெளியான நிலையில், அதில், அவர் கையை அசைக்கும் போது ஆறு விரல்கள் இருந்ததும் பெரும் பேசுபொருளாக மாறியது. குறிப்பாக ஈரான் ஆதரவு செய்திகள் மற்றும் இணையவாசிகள் நெதன்யாகு உயிருடன் இல்லை, இது ஏ.ஐ வீடியோ என பல பலவிதமான தகவல்களை கசிய விட்டனர்.

ஆனால், இந்த வதந்திகளை இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்ததோடு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நலமுடன் இருப்பதாக விளக்கமளித்திருந்தது. அதேநேரம், நெதன்யாகு இன்னும் உயிருடன் இருக்கும் பட்சத்தில் அவரை குறி வைத்து தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் காஃபி ஆர்டர் செய்து பருகுகிறார். மேலும் அந்த வீடியோவில், ''என் மக்களுக்காக நான் உயிரை விடத் தயாராக இருக்கிறேன்; என் விரல்களை எண்ணிப் பார்க்க விரும்புகிறீர்களா..? இங்கே பாருங்கள்... எல்லாம் சரியாக இருக்கிறது. உயிருடன் உள்ளேன், ஆதாரம் போதுமா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benjamin Netanyahu releases a video to confirm he is alive


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->