சட்டமன்ற தேர்தல் 2026; தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்; தேத்தலுக்காக 75,032 வாக்குச்சாவடிகள்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு உள்ளிட்ட 05 மாநிலங்களுக்கான தேர்தலுக்கான தேதியை இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்து 10 நாட்கள் கழித்து மே 04-ஆம் தேதி  வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

அதன்படி, மார்ச் 30-ஆம் தேதி, மனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 06 முடிவடைகிறது. வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 07 தொடங்கி, திரும்பபெறல் ஏப்ரல் 09 -ஆம் தேதியிடன் முடிவடைகிறது.

தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. 

அதாவது, மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி. இதில் முதல் முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 04 லட்சம் பேர். பெண் வாக்காளர்கள் 2.90 கோடி மற்றும் ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி பேர் உள்ளனர். அத்துடன், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேர்.

இந்த சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும், அதில், நகர்ப்புறங்களில் 30,967 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Tamil Nadu there are more female voters than male voters


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->