மாயமாகிய வேன்.. வாட்சப் குழுவால் கையும் களவுமாக சிக்கிய களவாணி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள வி.கொளத்தூர் பகுதியில், அதிகாலை நேரத்தில் வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா வேன் மாயமாகியுள்ளது. இதனையடுத்து வேனின் உரிமையாளர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மேலும், சுற்றுலா வேனின் விபரங்கள் தொடர்பான தகவலை ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் உள்ள வாட்சாப் குழுவில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகண்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வேன், டீசல் இல்லாமல் நின்றுள்ளது. 

அங்கிருந்த ஓட்டுனர்கள் டீசல் வாங்கிக்கொடுத்து உதவி செய்த நிலையில், சில மணித்துளிகள் கடந்த பின்னர் வாட்சாப் குழுவில் மாயமாகிய வேன் தொடர்பான தகவலை கண்டுள்ளனர். இதனையடுத்து, வாகனத்தை ஒட்டி வந்த நபரை பிடித்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

காவல் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையில் வேன் திருடப்பட்டது உறுதியானது. இதனையடுத்து பகண்டை காவல் துறையினர் சென்னை காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில், வேனை திருடியது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சார்ந்த ராஜேஷ் என்பவரின் மகன் ரவி என்பது தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Kolathur Van Theft Culprit Captured by Drivers Whats App Group Message Sharing


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->