ஜாய் கிரிசில்டா புகார் விவகாரம்: மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்...! - Seithipunal
Seithipunal


பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்துக்கும் சென்றது.இந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையதே என உறுதியாகக் கூறிய அவர், இதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயாராக இருப்பதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், தன்னுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி, ஜாய் கிரிசில்டாவுக்கு தடையுத்தரவு கோரி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் இந்த விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளதுடன், சட்டவட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் மீண்டும் சூடுபிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Joy Griselda complaint case High Court dismissed the case filed by Madampatti Rangaraj


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->