‘டாக்ஸிக்’ டீசருடன் பிறந்தநாள் கொண்டாட்டம்...! யாஷ் கதாபாத்திரம் ‘ராயா’ என அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


‘கே.ஜி.எப்.’ மூலம் இந்திய சினிமாவின் எல்லைகளை உடைத்தவர் யாஷ். ஒரே படத்தில் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர், பான் இந்திய ஹீரோவாக மாறிய கதை ரசிகர்களுக்கு தெரிந்ததே.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான ‘கே.ஜி.எப்.’ தொடர், வசூலில் சக்கரம் கட்டி ஓடி, யாஷை இந்தியா முழுவதும் ரசிகர் கூட்டம் கொண்ட நடிகராக உயர்த்தியது.

இந்த வெற்றிக்குப் பிறகு, யாஷ் தற்போது இயக்குநர் கீதா மோகன்தாஸ் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் டிராமா பாணியில் உருவாகும் இந்தப் படத்தில், நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த படம் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த நிலையில், இன்று 40வது பிறந்த நாளை கொண்டாடி வரும் யாஷுக்கு, திரையுலக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்து மழை பொழிந்து வருகின்றது.

பிறந்தநாளை சிறப்பாக்கும் விதமாக, ‘டாக்ஸிக்’ படக்குழு யாஷுக்கு வாழ்த்து தெரிவித்து, அவரது கதாபாத்திர அறிமுக போஸ்டர் மற்றும் டீசரை வெளியிட்டுள்ளது.அந்த போஸ்டரில், யாஷின் கதாபாத்திரப் பெயர் ‘ராயா’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டைலிஷ் லுக், மர்மமான பார்வை, சக்திவாய்ந்த தோற்றம் கொண்ட அந்த போஸ்டர், வெளியான சில நிமிடங்களிலேயே சோஷியல் மீடியாவில் வைரலாகி, ரசிகர்களின் உற்சாகத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Birthday celebration Toxic teaser Yash character announced Raya


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->