‘ஒரு தேதி வேண்டாம்… நீங்களே தொடக்கம்!’ - ஜனநாயகன் சர்ச்சையில் விஜய்க்கு நடிகர் ரவி மோகன் உறுதி ஆதரவு
No need date You beginning Actor Ravi Mohan extends his firm support Vijay movie controversy
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் இடம்பெற்றுள்ள சில சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக தணிக்கை வாரியம் இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்காமல் உள்ளது.
இதனால், படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்ப உள்ளதாக தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நேற்று இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ‘ஜனநாயகன்’ படத்திற்கான தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை (9-ந் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்டது. இதன் காரணமாக, திட்டமிட்டபடி ஜனவரி 9-ந் தேதி படம் வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தைச் சுற்றிய சர்ச்சை அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை பலரும் விஜய்க்கு ஆதரவாக தங்களின் குரலை உயர்த்தி வருகின்றனர்.
அந்த வரிசையில், நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர்,“அண்ணா… ஒரு தம்பியாக, உங்களுக்கு துணையாக நிற்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக நானும் உங்களுடன் நிற்கிறேன்.
உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேதி தேவையில்லை. நீங்களே தொடக்கம். அந்த தேதி எப்போது வந்தாலும், அன்றுதான் பொங்கல். நான் விஜய் அண்ணாவுடன் நிற்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்று வருகிறது.
English Summary
No need date You beginning Actor Ravi Mohan extends his firm support Vijay movie controversy