பராசக்தியில் 23 காட்சிகள் நீக்கம்? தணிக்கை சான்றிதழ் இழுபறி; மறுசீராய்வுக் குழுவை அணுகிய படக்குழு; படம் வெளியாவதில் சிக்கல்..?
With 23 scenes removed from Parasakthi the film crew approached the review committee
சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க்கியுள்ளார். படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளதோடு, ரவிமோகன், அதர்வா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஆனால் தற்போது வரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதால், குறிப்பிட்ட தேதியில் (ஜனவரி 10) படம் வெளியாகுமா? என குழப்பம் நிலவியுள்ளது. அத்தோடு, படத்தில் இருந்து 23 காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் (CBFC) பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பான சில காட்சிகளுக்கு வாரியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும், அவற்றை நீக்க அல்லது மாற்றியமைக்கப் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு இதனை மாற்றியமைத்தாலோ அல்லது நீக்கினாலோ, இந்தத் படத்தின் கதை ஓட்டத்தை வெகுவாகப் பாதிக்கும் என்றும், அதன் வரலாற்றுத் தன்மை வலுவிழந்துவிடும் என்று இயக்குநர் கூறி, சுதா கொங்கரா, மும்பையிலுள்ள தணிக்கை வாரியத்தின் மறுசீராய்வுக் குழுவை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுமா என்பது குறித்து இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. பராசக்திக்கு தணிக்கை சான்றிதழ் இந்த படமும் வெளியாகவும் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் இழுபறி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
With 23 scenes removed from Parasakthi the film crew approached the review committee